ஹைலைட்ஸ்:

  • ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிராபாய் சானுவின் தற்போதைய நிலை
  • மிராபாய் சானுவின் நிலையை பார்த்து மாதவன் அதிர்ச்சி

ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடந்து வருகிறது. அதில் பளுதூக்கும் போட்டியில் மணிபூரை சேர்ந்த மிராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். மிராபாய் சானு நாடு திரும்பியிருக்கிறார். இந்நிலையில் மணிபூரில் இருக்கும் தன் வீட்டு சமையல் அறையில் தரையில் அமர்ந்து மிராபாய் சாப்பிடும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமா செய்திகள்

அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நடிகர் மாதவன் ஆகியோரை டேக் செய்து ஒருவர் கூறியிருப்பதாவது,

ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு மிராபாய் தன் வீட்டில் இருக்கும் புகைப்படம். வறுமை தன் கனவை நினைவாக்கவிடாமல் தடுக்க இந்த பெண் அனுமதிக்கவில்லை. உண்மையான இன்ஸ்பிரேஷன் என்றார்.

அந்த ட்வீட்டை பார்த்த பலரும், உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த மிராபாயின் வீட்டில் இப்படி ஒரு கஷ்டமா என்று அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் மிராபாயின் புகைப்படத்தை பார்த்த நடிகர் மாதவனாலும் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.

மாதவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இது உண்மையாக இருக்க முடியாது. எனக்கு வார்த்தையே வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மிராபாய் சானு இரண்டு ஆண்டுகள் கழித்து தன் குடும்பத்தாரை சந்தித்திருக்கிறார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

2 ஆண்டுகள் கழித்து குடும்பத்தாரை சந்தித்துள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் இந்த அளவுக்கு வர பல தியாகங்கள் செய்த அம்மா, அப்பாவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

எனக்கு ஒன்னும் இல்ல, நல்லா இருக்கேன், வதந்தி பரப்பியவருக்கு நன்றி: ஷகீலா