கேமரூன் கிரீன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்துள்ளது. 314 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் 96 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்தார், பாபர் அசாம் 57 ரன்கள் எடுத்தார், மற்றவர்கள் சொதப்ப பாகிஸ்தான் அணி தன் கடைசி 9 விக்கெட்டுகளை 105 ரன்களுக்கு இழந்து 45.2 ஓவர்களில் 225 ரன்களுக்குச் சுருண்டு மண்ணைக்கவ்வியது.
ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் சாம்ப்பா 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ஹஷிம் அம்லாவுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்களை வேகமாக எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பெற்றார். அவர் ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஸ்வெப்சன் பந்தில் ஒரு பவுண்டரியுடன் இந்த மைல்கல்லை எட்டினார். பாகிஸ்தான் ரசிகர்கள் இவர் பெயரை கத்திக் கொண்டே சாதனையை செல்போன் லைட் அடித்துக் கொண்டாடினர்.
ஆஸ்திரேலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியின் போது, வெறும் 22.67 சராசரியுடன் போராடிய ஹெட், பாகிஸ்தான் தாக்குதலில் ஆதிக்கம் செலுத்திய ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஹெட் தொடக்கத்தில் இருந்து அதிரடியில் இறங்கினார். அவர் ஃபின்ச்சுடன் 110 ரன் தொடக்க கூட்டணி அமைத்தார், நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் ஏரோன் பிஞ்ச் 36 பந்துகளில் 23 என்று சொதப்பி அவுட் ஆனார்.
எண். 3- இறங்கிய பென் மெக்டெர்மாட், 70 பந்துகளில் ஒரு நிதானமான 55 ரன்களுடன் ஆடிவந்த போது மிஸ்பீல்டுக்கு ரன் ஓடப்போய் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலியாவின் பேட்டிங் இன்னிங்ஸில் இது இரண்டு பாதிகளின் கதையாக இருந்தது, ஏனெனில் அவர்கள் முதல் பாதியில் ஒரு ஓவருக்கு ஏழு ரன்கள் எடுத்தனர், இரண்டாவது பாதியில் சமன் செய்ய, ஜாஹித் கூர்மையான திருப்பத்தை உருவாக்கினார், அதே நேரத்தில் இடது கை மரபுவழி குஷ்தில் ஷா சிறப்பாக பந்து வீசிக் கட்டுப்படுத்தினாலும் ஆஸ்திரேலியா 313 ரன்களை எட்டுவதை தடுக்க முடியவில்லை.
பாகிஸ்தான் இன்னிங்சில் பகர் ஜமான் 18 ரன்களில் அபாட்டிடம் காலியானார், பிறகு பாபர் அசாம், இமாம் உல் ஹக் 20 ஓவர்களில் 96 ரன்களைச் சேர்த்து மந்தம் காட்டினர். பாபர் அசாம் அவுட் ஆனவுடனேயே அணி அடுத்த 105 ரன்களில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து படுதோல்வி கண்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.