விரட்டலின் போது ஃபகர் ஜமான் (64 பந்தில் 67, 7 பவுண்டரி 2 சிக்ஸ்), இமாம் உல் ஹக் ஜோடி 118 ரன்கள் என்ற சதக்கூட்டணி அடித்தளம் அமைத்துக் கொடுக்க 229/1 என்று பாகிஸ்தான் ஸ்கோர் இருந்த போது 34.1 ஓவர் ஆகியிருந்தது. இமாம் உல் ஹக் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம், இமாம் உல் ஹக் கூட்டணி 111 ரன்களை 16 ஓவர்களில் சேர்த்து நிலைநிறுத்திய சமயத்தில் இருவரும் சேர்ந்து அடுத்த 10 ஓவர்களில் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். அப்போது பாபர் அசாம், ரிஸ்வான் இணைந்தனர். ஆனால் ரிஸ்வான் ஸ்டாண்ட் கொடுக்க பாபர் அசாம் வெளுத்துக் கட்டினார், இருவரும் சேர்ந்து 10 ஓவர்களில் 80 ரன்கள் கூட்டணி அமைத்தனர், இதில் பெரும்பாலும் ஸ்கோர் செய்தது பாபர் அசாம் தான், ரிஸ்வான் 23 ரன்கள்தான் எடுத்தார்,
பாபர் அசாம் அவுட் ஆகும் போது ஸ்கோர் 309/4 என்று 44.2 ஓவர்களில் இருந்தது, அதன் பிறகு ரிஸ்வான் 23 ரன்களில் அவுட் ஆகும் போது 317/5 என்று 46வது ஓவரில் இருந்தது. ஆனால் குஷ்தில் ஷா 17 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்தும், இப்திகார் அகமட் 8 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ 49 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் சொதப்பலாக டெஸ்ட் போட்டி போல் ஆடிய பாபர் அசாம் இந்தப் போட்டியில் சுதாரித்துக் கொண்டார். ஆனால் ஆஸ்திரேலியா பவுலிங்கும் ஏ அணி பவுலிங் தான் என்றே கூற வேண்டும். இமாம் உல் ஹக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 2 சதங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், தெரியாமல் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைக்க அந்த அணியின் ட்ராவிஸ் ஹெட் அனாயசமாக முதல் ஒருநாள் போட்டியில் அடித்த சதத்துடன் இந்தப் போட்டியிலும் 6 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 70 பந்தில் 89 ரன்கள் எடுக்க, பென் மெக்டர்மாட், 108 பந்துகளில் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்தார், மார்னஸ் லபுஷேன் 59 ரன்களை விரைவு கதியில் எடுக்க மார்கஸ் ஸ்டாய்னிஸ் 33 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் பின்னி எடுத்தார். கடைசியில் ஷான் அபாட் 16 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 348/8 என்று இமாலய இலக்கை எட்டியது.
பாகிஸ்தானில் மீண்டும் ஷாஹின் ஷா அஃப்ரீடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய பந்து வீச்சில் முதன்மை பவுலர்கள் யாரும் இல்லாததால் ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது, ஆனால் எது எப்படியிருந்தாலும் 348 ரன்கள் இலக்கை சேஸ் செய்வதென்பது பெரிய காரியம்தான், அதனை இமாம் உல் ஹக், இவருக்கும் மேலாக பாபர் அசாம் விரட்டி வரலாற்று சேசிங் ஆக்கி வெற்றி பெற்றனர். ஆட்ட நாயகன் பாபர் அசாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.