aussies

லாகூரில் நேற்று நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 162 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழக்க, இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 19.1 ஓவர்களில் 163/7 என்று இலக்கை கடந்து வெற்றிபெற்று ஒரேயொரு டி20 அடங்கிய தொடரை 1-0 என்று கைப்பற்றி வெற்றியுடன் பாகிஸ்தான் பயணத்தை முடித்தது.ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது .

கேப்டன் பாபர் அசாம் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது . அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 46 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.1ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 55 ரன்கள் எடுத்தார்.

67/1 என்று இருந்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளை 95 ரன்களுக்கு இழந்தது. கடைசி 7 விக்கெட்டுகளை 44 ரன்களுக்கு இழந்தது. காரணம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளை 28 ரன்களுக்குக் கைப்பற்ற ஆடம் ஸாம்ப்பா 29 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணியில் அதிரடி தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 14 பந்தில் 26 ரன்களையும் ஏரோன் பிஞ்ச் 55 ரன்களையும் ஜோஷ் இங்லிஸ் 15 பந்தில் 24 ரன்களையும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 9 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களையும் எடுத்தனர். பென் மெக்டர்மாட் 19 பந்தில் 22 ரன்கள். பாகிஸ்தான் தரப்பில் மீண்டும் ஷாஹின் ஷா அப்ரீடி 21 ரன்களுக்கு 2 விக்கெட் என்று அசத்தினார். முகமது வாசிம் 2 விக்கெட்டுகளையும், உஸ்மான் காதிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். ஆட்ட நாயகன் ஏரோன் பிஞ்ச்.

இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.