தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி குமாரின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
’அட்டகத்தி’, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, உள்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சிவி குமார் மாயவன், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘கொற்றவை’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில் சிவி குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைட்டானிக்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தற்போது மே 6-ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா ஜாவேரி, காயத்ரி, காளி வெங்கட், மதுமிதா, தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜானகிராமன் என்பவர் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையில், பாலு ஒளிப்பதிவில், ராதாகிருஷ்ணன் தனபால் படத்தொகுப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது
By means of the grace of lord Murugan Rom-Com #Titanic all Set For Grand liberate on May6 IN Theatres #TitanicFromMay6@thirukumaranEnt @kalaiActor @anandhiactress @ashnazaveri @kaaliactor @dirjanakiraman @nivaskprasanna @IgnatiousAswin @editorRAD @thinkmusicindia @onlynikil pic.twitter.com/gpXDCTfrcr
— C V Kumar (@icvkumar) April 1, 2022