இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் இல்லை. இதனால் பார்ம் அவுட்டில் இருக்கும் அஜிங்கிய ரஹானே, சேத்தேஸ்வர் புஜாரா போன்றவர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். முதல் டெஸ்டில், இந்த இருவருக்கும் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இதில் இவரும் சிறப்பாக செயல்படவில்லை என்றால், இதுதான் அவர்களின் கடைசி போட்டியாகக் கூட இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
ரஹானே பார்ம்:
ரஹானேவைப் பொறுத்தவரை அவர், தென்னாப்பிரிக்கா தொடர் துவங்குவதற்கு முன்பே, தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக டெஸ்ட்களில் விளையாடிய முன்னாள் வீரர் வினோத் காம்பிளியிடம் 3 நாட்கள்வரை பயிற்சி பெற்றார். அப்போது, அந்த மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்ற நுணுக்கத்தை காம்பிளி சொல்லிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் வலைப் பயிற்சியில் மனவுறுதியுடன் முன்கால்களை நகர்த்தி அபாரமாக தடுப்பாட்டத்தில் ஈடுபடுவதாகச் செய்திகள் வெளி வந்துள்ளன.
Breaking: ஓய்வை அறிவித்தார் ‘இந்திய வீரர்’: பயிற்சியாளராக மாற திட்டம்?
புஜாரா நிலைமை:
புஜாரா கடந்த 40 இன்னிங்ஸ்களுக்கு மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அரை சதங்கள் அடித்தாலும், அதுவும் அவ்வபோதுதான். தொடர்ச்சியாக ரன்களை குவிக்க சிரமப்பட்டு வருகிறார். இதனால் சமீப காலமாகவே, தடுப்பாட்டத்தை விட்டுவிட்டு வேகமாக ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவுட் சைட் ஆஃப் திசையில் செல்லும் பந்துகளையும் அடித்து ஆட முற்பட்டு, ஆட்டமிழந்து விடுகிறார். இதனால், இனியும் இவர் வேலைக்கு ஆக மாட்டார் என பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது.
அவரச மெய்ல்:
இந்நிலையில், பிசிசிஐ தேர்வுக்குழுவினர் புஜாராவுக்கு அவசர அவசரமாக ஒரு மெயிலை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மெயிலில், ‘முதல் டெஸ்ட் போட்டியில் நீங்கள் உங்கள் திறனை நிச்சயம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும்’ என கறாராக தெரிவித்துள்ளனராம். இதன்மூலம், முதல் போட்டியில் புஜாரா சிறப்பாக விளையாடவில்லை என்றால், அதுதான் அவரின் கடைசி போட்டியாக இருக்கும் என்பது தெரிய வருகிறது. இதனால், புஜாரா அப்சட்டில் இருக்கிறாராம்.
அஸ்வினை வச்சு செஞ்சது…மகிழ்ச்சியாக இருக்கிறது: ‘உண்மையில்தான்’…ரவி சாஸ்திரி அதிரடி பேட்டி!
அவர் அப்சட்டில் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. முதல் போட்டி நடைபெறவுள்ள செஞ்சூரியன் மைதானம், முழுக்க முழுக்க வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம். குறிப்பாக, தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் பழக்கப்பட்ட பிட்ச். இந்தியாவுக்கு அது புதியது என்பதால், ரன்களை குவிக்க தடுமாற வாய்ப்புள்ளது. மேலும், இந்த பிட்சில் தென்னாப்பிரிக்க அணிதான் அதிக வெற்றிகளை குவித்துள்ளது.
இந்த மைதானத்தில் நடைபெற்ற 26 டெஸ்ட் போட்டிகளில், தென்னாப்பிரிக்க அணி 21 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. 3 போட்டிகள் டிரா, 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இந்த தோல்விகளும் 2015-க்கு முன்புதான். இந்த மைதானத்தில் இந்தியா, 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.