இந்நிலையில், இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக எந்த பவுலர்கள் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள் என்பதை இந்த பட்டியலில் பார்ப்போம்.
5. டுவைன் பிராவோ:
ஐபிஎல்யில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமைக்குரியவர், இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை, பஞ்சாப் பணிக்கு எதிராக 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
4. புவனேஷ்வர் குமார்:
இந்திய அணியில் சிறந்த வேகபந்து வீச்சாளார் என பெயர் பெற்ற இவர், தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இதுவரை பஞ்சாப் அணிக்கு எதிராக 23 ரன்களை எடுத்துள்ளார்.
3. யுஸ்வேந்திர சாஹல்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த இவர், இந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 115 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், பஞ்சாப் அணிக்கு எதிராக 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
2. உமேஷ் யாதவ்:
34 வயதாகும் இந்த இந்திய வேகபந்துவீச்சாளர், ஐபிஎல்யில் இதுவரை 5 அணிகளில், 123 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பஞ்சாப் அணிக்கு எதிராக, இதுவரை 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1. சுனில் நரைன்:
வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இந்த சுழற் பந்துவீச்சாளர்தான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் இதுவரை இவர், 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.