சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது மகளின் ஹூட் செயலி வழியாக வெளியிட்ட ஆடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த படம் பல எதிர் விமர்சனங்களையும் தாண்டி வசூலை வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் நிறைவு பெற்றதை அடுத்து தற்போது தனது மகளின் ஹூட் செயலி வழியாக ஆடியோ ஒன்றை ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், ‘எதிர் விமர்சனம் மற்றும் மழை ஆகியவற்றை கடந்து ’அண்ணாத்த’ திரைப்படம் வெற்றி அடைந்துள்ளது என்றும், மழை இல்லை என்றால் இந்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும் என்றும், ’அண்ணாத்த’ வெற்றிக்கு இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஆகியோர்களின் நல்ல மனமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ’பல இடர்களை தாண்டி ’அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிந்ததாகவும் நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான் என்றும் கூறியுள்ளார். ரஜினியின் இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Famous person Rajinikanth about #Annaatthe's efficiency in Field Place of business in spite of Heavy rains ❤️#Rajinikanth @rajinikanthpic.twitter.com/KkO9G6Zz7F
— Rajini Developments Web page (@RajiniTrendPage) December 23, 2021