பயிற்சியாளர் ரவி சாஸ்திரி?
இந்த புதிய அணிகள், யார் யாரை தக்கவைப்பது என்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், அகமதாபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பௌலிங் கோச்சாக பரத் அருண், பீல்டிங் கோச்சாக ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் செயல்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
IND vs SA: ‘முதல் டெஸ்ட்’…புதிய ரஹானேவ பாக்க தயாரா? பார்முக்கு திரும்ப ‘மாஸ்டர் பிளான்’ ரெடி!
இதனைத் தொடர்ந்து, ஐபிஎலை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம் ரவி சாஸ்திரியை வைத்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அதில், ரவி சாஸ்திரி உணவு சமைத்து, அதனை ருசி பார்ப்பதுபோல் இருந்தது. அதாவது, அவர் கிரிக்கெட் வர்ணனையாளராகச் செயல்பட உள்ளார் என்பதை மறைமுகமாக தெரிவித்தது. இதனால், இவர் பயிற்சியாளரா, வர்ணனையாளராக என ரசிகர்கள் குழம்பினர்.
ரவி சாஸ்திரி பேட்டி:
இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரவி சாஸ்திரி, இது தொடர்பாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதில், “நான் இப்போதுதான் பயோ பபுளில் இருந்து வெளியேறியுள்ளேன். வெளியுலக காற்றை சுவாசிக்க விரும்புகிறேன். எந்த அணியுடனும் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. அனைத்தும் தவறான தகவல். தொலைக்காட்சி காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். அதுதான் எனக்கு பிடித்தமான பணி” எனத் தெரிவித்துள்ளார்.இதனால் அகமதாபாத் அணி, வேறொரு அனுபவமிக்க பயிற்சியாளரை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அஸ்வினை வச்சு செஞ்சது…மகிழ்ச்சியாக இருக்கிறது: ‘உண்மையில்தான்’…ரவி சாஸ்திரி அதிரடி பேட்டி!
முதலில் அகமதாபாத் அணியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த அவரை, ஸ்டார் நிறுவனம் வர்ணனையாளராக இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒப்பந்தம் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.