ஹைலைட்ஸ்:

  • இன்று பிறந்தநாள் கொண்டாடும் எஸ்.ஏ. சந்திரசேகர்
  • எஸ்.ஏ.சி.க்கு மாநாடு படக்குழு வாழ்த்து

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு அப்துல் காலிக்காக நடித்திருக்கும் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். அவர் தமிழ்நாடு முதல்வராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் விஜய்ணாவின் தந்தை, தமிழ்நாடு முதல்வர் எஸ்.ஏ. சந்திரசேகர் வாழ்க என்று ரசிகர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வருங்கால முதல்வரே, தமிழகத்தின் எதிர்காலமே ஆகிய வாசகங்களுடன் கூடிய போஸ்டர்களை அடித்து ஒட்டுவார்கள் ரசிகர்கள். இந்த ஆண்டு ஒருபடி மேலே சென்று தம்பி வா, தலைமை ஏற்க வா என்று முதல்வர் ஸ்டாலினே அழைப்பது போன்று போஸ்டர் அடித்துவிட்டனர்.

விஜய்யை முதல்வராக்கி பார்க்க ரசிகர்கள் மட்டும் அல்ல அவரின் அப்பாவும் தான் ஆசைப்படுகிறார். விஜய்யை வருங்கால முதல்வரே என்று கூறி போஸ்டர் அடிப்பதில் தவறு இல்லை என்று முன்பு தெரிவித்தார் எஸ்.ஏ. சந்திரசேகர். இந்நிலையில் அவரை தமிழ்நாடு முதல்வரே என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

மாநாடு படக்குழு எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தளபதியின் தந்தை… சிந்தை முழுக்க சினிமா நிரம்பியிருக்கும் எந்தை.. இளமையின் உற்சாக ஊற்று. என்றும் இன்றுபோல் தன்னிகராக கர்வம் கொண்டு வாழ்க. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எஸ் ஏ சந்திரசேகர் சார்.
#HBDSAC sir என்று தெரிவித்துள்ளார்.

Vijay நடிகை சங்கவியை தினமும் இரவில் தொல்லை செய்தார் விஜய்: பயில்வான் ரங்கநாதன்