ஹைலைட்ஸ்:

  • கணவரை பிரிந்த சமந்தா
  • சமந்தா விவாகரத்து பற்றி பரவும் தகவல்

சமந்தாவும், அவரின் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டார்கள். பிரிவை அறிவித்த பிறகு சமந்தா ட்விட்டர் பக்கம் வரவில்லை. இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தத்துவமாக போஸ்ட் போடுகிறார்.

சமந்தா படுகவர்ச்சியாக நடிப்பதும், கெரியருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் தான் கணவர் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சமந்தா, கணவர் பிரிய இது தான் காரணம் என்று கூறி சில தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது. சமந்தா தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் நாக சைதன்யா குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லையாம்.

மேலும் சமந்தாவுக்கும், டிசைனர் ஒருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவது என்று முடிவு செய்திருப்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம்.

இந்நிலையில் சமந்தாவின் விவாகரத்துக்கு இது தான் காரணம் என்று ஆளாளுக்கு எதையாவது கூறி வருகிறார்கள். அதை சமந்தாவும், நாக சைதன்யாவும் கண்டுகொள்ளவில்லை.

மேலும் விவாகரத்திற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக தான் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா விவாகரத்து: மாமனார் நாகர்ஜுனாவுக்கு குவியும் பாராட்டு, ஏன் தெரியுமோ?

இதற்கிடையே மாற்றம் பற்றி பேசியிருக்கிறார் சமந்தா. விவாகரத்து விஷயம் குறித்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா பெருந்தன்மையாக போட்ட ட்வீட் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.