ஹைலைட்ஸ்:

  • சமந்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரல்
  • சமந்தா, நாக சைதன்யா திருமண நாளை கொண்டாடும் ரசிகர்கள்

சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி திருமணம் நடந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.

இந்நிலையில் நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு கணவரை பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார் சமந்தா.

விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு முதல்முறையாக இன்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார். அதுவும் திருமண நாள் அன்று.

தான் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆதரவு கோரியிருக்கிறார்.

முன்னதாக மூன்றாவது திருமண நாள் அன்று தானும், கணவரும் சிரித்த முகமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு,

நீ எனக்கான நபர், நான் உனக்கானவள். எது நடந்தாலும் சேர்ந்தே இருப்போம். திருமண நாள் வாழ்த்துக்கள் கணவரே என்று கூறியிருந்தார்.

சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டாலும் அவர்களின் நான்காவது திருமண நாளை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சமந்தாவையும், நாக சைதன்யாவையும் சேர்த்து வைக்குமாறு நாகர்ஜுனாவிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விவாகரத்து செய்தியை கேட்டதில் இருந்தே எனக்கு…: சமந்தா தந்தை உருக்கம்