ஹைலைட்ஸ்:

  • சமந்தாவுக்கு பங்களா கொடுத்தாரா நாக சைதன்யா?
  • கணவரை பிரிந்து வாழும் சமந்தா

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடிப்பது நாக சைதன்யா குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நாக சைதன்யா குடும்பத்தார் ரூ. 200 கோடியை ஜீவனாம்சமாக தர முன்வந்தார்களாம். ஆனால் எனக்கு பணம் தேவையில்லை என்று சமந்தா கூறியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் சொகுசு பங்களாவை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக கொடுத்துவிட்டார் நாக சைதன்யா என்று தெலுங்கு ஊடங்கள் தெரிவித்துள்ளன. நாக சைதன்யாவும், சமந்தாவும் சேர்ந்து வாங்கி, அதிக செலவு செய்து அலங்கரித்த பங்களா அது.

சமந்தாவை விவாகரத்து செய்வது என்று முடிவு செய்ததும் நாக சைதன்யா அந்த வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஹோட்டலில் தங்கியிருக்கிறாராம்.

சமந்தா அந்த பங்களாவில் தான் இருக்கிறார். தொடர்ந்து ஹைதராபாத்தில் வசிக்கப் போவதாக சமந்தா கூறியிருக்கிறார். அந்த பங்களா முழுக்க அவர்கள் நன்றாக வாழ்ந்த நினைவுகள் இருப்பதால் சமந்தா தொடர்ந்து அங்கேயே தங்குவாரா இல்லை புது வீடு வாங்கி குடியேறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

நேற்று சில மணிநேரத்தில் ரூ. 25 லட்சம் வென்ற சமந்தா: எப்படி தெரியுமா?