ஹைலைட்ஸ்:

  • முதல்முறையாக விளக்கம் அளித்த சமந்தா
  • என்னை பற்றி வதந்தி பரப்புகிறார்கள்- சமந்தா

சமந்தாவும், அவரின் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டார்கள். கணவரை பிரிந்ததை அக்டோபர் 2ம் தேதி உறுதி செய்தார் சமந்தா.

இந்நிலையில் அவர் சமூக வலைதளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
என் தனிப்பட்ட பிரச்சனையில் நீங்கள் காட்டிய அன்பை பார்த்து நெகிழ்ந்தேன். உங்களின் ஆதரவு, அக்கறை மற்றும் வதந்திகள், என்னை பற்றி பரப்பப்படும் கதைகளை நம்பாமல் இருப்பதற்கு நன்றி. எனக்கு கள்ளத்தொடர்புகள் இருந்ததாகவும், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், நான் அபார்ஷன் செய்ததாகவும் கூறுகிறார்கள்.

விவாகரத்து என்பதே மிகவும் வேதனையாக விஷயம். நான் அதில் இருந்து மீண்டு வர அனுமதிக்காமல் தொடர்ந்து என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் எதுவும் என்னை பாதிக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன் என்றார்.

சமந்தாவுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஒருவருக்கும் ஏற்பட்ட தொடர்பு நாக சைதன்யா குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்று தகவல் வெளியானது. மேலும் குழந்தை பெற்றுக்கொள்வதில் சமந்தாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் சமந்தா விளக்கம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha: நாக சைதன்யாவின் முதல் மனைவியை எக்ஸ்போஸ் செய்த சமந்தா

மாயோன் பட விழாவில் நடிகர் ராதாரவியை புகழ்ந்த தனஞ்செயன்!