சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பெறுவதற்கு சில காரணங்கள் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

குழந்தை

குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக சமந்தா, நாக சைதன்யா இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். அந்த பிரச்சனை நாளடைவில் பெரிதாகவிட்டது என்று கூறப்படுகிறது. குழந்தை விவகாரமும் விவாகரத்துக்கு ஒரு காரணம் என்று பேசப்படுகிறது.

கெரியர்

சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாக சைதன்யா குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லையாம். மேலும் கதை தேர்வு, யாருடன் நடிக்க வேண்டும் என்பதில் எல்லாம் கணவர் குடும்பத்தார் தலையிட்டார்களாம். இது சமந்தாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

டிசைனர்

சமந்தா அடிக்கடி பார்ட்டிக்கு செல்பவர். தன் மனைவி பார்ட்டிகளுக்கு செல்வது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லையாம். சமந்தாவும், ஆடை வடிவமைப்பாளர் ஒருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அந்த நெருக்கமும் நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லையாம். நட்பு விவகாரத்தாலும் பிரச்சனை ஏற்பட்டதாம்.

நடிகைகள்

நாக சைதன்யா தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகைகளில் இரண்டு பேருடன் நெருக்கமாக இருக்கிறாராம். அந்த இரண்டு பேரிடமும் பேசக் கூடாது என்று சமந்தா கூற, நாக சைதன்யா அதை ஏற்க மறுத்துவிட்டாராம். நாக சைதன்யாவின் இந்த செயல் சமந்தாவை கோபம் அடையச் செய்ததாம்.

பொறாமை

ஏ மாய சேசாவே படத்தில் தான் நாக சைதன்யாவும், சமந்தாவும் சேர்ந்து நடித்தார்கள். இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கெரியரை துவங்கிய போதிலும் நாக சைதன்யாவை விட வெற்றிகரமானவராக ஆனார் சமந்தா. இதனால் ஒரு சக கலைஞராக சமந்தாவின் வளர்ச்சியால் பொறாமைப்பட்டாராம் நாக சைதன்யா.