sehwag

மார்ச் 29, 2004, இதே தினம் தான், இந்திய அணி சவுரவ் கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் தொடரை சமன் செய்து விட்டு பாகிஸ்தான் வந்திருந்த போது சுல்தான் ஆஃப் முல்டான் என்ற பெயர் எடுப்பார் வீறு விரூ விரேந்திர சேவாக் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவிலிருந்து டெஸ்ட் போட்டிகளில் ஒருவர் முச்சதம் அடிப்பேன், அதுவும் பரமவைரிகளான பாகிஸ்தான்பந்து வீச்சை புரட்டி எடுப்பேன் என்று காட்டி 309 ரன்களை முதன் முதலில் எடுத்த மகா வீரர் ஆனார் விரேந்திர சேவாக்.இதே மார்ச் 29, 2008-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் அதிவேக உலக சாதனை முச்சதம் விளாசியதோடு 2வது முச்சதத்தையும் விளாசி 319 ரன்கள் எடுத்தார் சேவாக்.

Sehwag20211025083145

சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். இப்போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தது மற்றும் 356/2 என்ற டெஸ்டின் முதல் நாள் முடிவில் சேவாக் ஆட்டமிழக்காமல் 228 ரன் எடுத்தார். ஆட்டத்தின் இரண்டாவது நாளில், சேவாக் தனது முச்சதத்தை பதிவு செய்தார். 295 ரன்கள் எடுத்திருந்த போது சக்லைன் முஷ்டாக்கின் பந்துவீச்சில் அவர் ஒரு சிக்ஸர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்முனையில் சச்சின் டெண்டுல்கர் மானசீக குருநாதர் முன்னிலையில் சிஷ்யன் சேவாக் முதன் முதலில் முச்சதம் அதுவும் அன்னிய மண்ணில் மறக்க முடியுமா அந்த அடியை? சேவாக் 309 ரன்களை 375பந்துகளில் விளாசினார். அதில் 39 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக 107 பந்துகளில் 100, 150 பந்துகளில் 150, 222 பந்துகளில் 200, 299 பந்துகளில் 250, 364 பந்துகளில் 300 ரன்கள். என்னா அடி என்பதை பவுலிங்கில் இரட்டைச் சதம் அடித்த சக்லைன் முஷ்டாக்கை கேட்டால் தெரியும் சக்லைன் 43 ஓவர் 4 மெய்டன் 204 ரன் 1 விக்கெட். வேகப்பந்து வீச்சாளர் அக்தர் 32 ஓவர் 119 ரன், மொகமட் சமி 110 ரன் விக்கெட் இல்லை. ஷபீர் அகமட் 122 ரன் நோ-விக்கெட். ஆக 3 வேகப்பந்து வீச்சாளர்கள் சதம், ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் இரட்டைச் சதம் அடித்த பெருமை சேவாகின் அதிரடி மட்டையையே சாரும்.

sehwag8

கிரிக்கெட் என்பது எப்படி எனில் பேட்ஸ்மென்கள் ரன் எடுக்க வேண்டும், பவுலர்கள் விக்கெட் எடுக்க வேண்டும் இதை செய்து காட்டியவர் சேவாக்.

இந்தியா 675/5 டிக்ளேர் செய்தது. சச்சின் 194 அடித்தார், அவர் இரட்டைச் சதம் அடிக்காமல் டிக்ளேர் செய்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பாகிஸ்தான் 407 மற்றும் 216 ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. அனில் கும்ப்ளே 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆட்ட நாயகன் விரேந்திர சேவாக்.

இது இப்படியென்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2008-ல் சேப்பாக்கத்தை அலறவிட்டார் இதே தினத்தில் சேவாக், இந்த முச்சதம் 304 பந்துகளில் வந்தது. 42 பவுண்டரி 5 சிக்ஸ். இந்த முறை தென் ஆப்பிரிக்காவின் ஸ்பின்னர் பால் ஹாரிஸ் பவுலிங்கில் இரட்டைச் சதம். டேல் ஸ்டெய்ன், மகாயா நிடினி ஆகியோரும் பவுலிங்கில் சதம். இந்த மேட்ச் ட்ரா ஆனது. ஆட்ட நாயகன் சேவாக்தான்.

இது போன்ற இன்னொரு வீரர் தவம் கிடந்தாலும் இந்திய அணிக்கு இனி கிடைக்காது.  ஒரு சச்சின் போனால் ஒரு கோலி வருவார், ஒரு சேவாக், ஒரு கபில் போனால் இன்று வரை அப்படி ஒரு வீரர் நமக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.