shilpshettyasv4455 fbc

shilpshettyasv4455

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “பீஸ்ட்“ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் லிரிக்கல் பாடலான “ஹலமதி ஹபிபோ“ பாடலுக்கு சாதாரண ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களது ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு சமூகவலைத் தளங்களையே அலற விடுகின்றனர். அந்த அளவிற்கு அரபிக்குத்துப் பாடல் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் குஷி படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து “மக்கரீனா மக்கரீனா“ என்று தனது க்யூட்டான நடனத்தை வெளிப்படுத்திய நடிகை ஷில்பா ஷெட்டி, சூர்யாவுடன் இணைந்து “தீரன் அதிகாரம் ஒன்று“ படத்தில் நடித்திருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் ஆகிய மூவரும் அரபிக்குத்துப் பாடலுக்கு பாடலுக்கு படு ஸ்டைலான நடனத்தை ஆடியுள்ளனர்.

34 4

பாலிவுட்டில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை ஷில்பா ஷெட்டி நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகிய மூவரும் விருந்தினர்களாக அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த நிலையில் அரபிக்குத்துப் பாடலுக்கு நடனம் ஆடி ரசகிர்களை மிரள வைத்திருக்கின்றனர்.

ஜான் ஆபிரகாம், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்குலின் மூவரும் இணைந்து நடித்திருக்கும் “Assault“ திரைப்படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் இவர்களது ஜாலியான அரபிக்குத்துப் பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.