பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை கூறுவதற்கு எவ்வளவு கமிஷன் பணம் வாங்குகிறீர்கள் என நடிகர் சித்தார்த் ஓப்பனாக தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு என்பது அந்த படத்தின் தயாரிப்பாளரை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்ற நிலையில், பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து ஆளாளுக்கு தகவல்களை வெளியிட்டு வரும் போக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சமூக வலைதளங்களிலும் யூடியூபிலும் இருக்கும் பயனாளிகள் சிலர் ஒரு திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடி வசூல், 300 கோடி வசூல் என பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித ஆதாரமும் இன்றி பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் பகிரப்பட்டு வருவது குறித்து நடிகர் சித்தார்த் தனது சமூகவலைதளத்தில் காட்டமாக கூறியுள்ளார்.
ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியிடுவதற்கு எவ்வளவு கமிஷன் பெற்று வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய சித்தார்த், ‘முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் தகவல் குறித்து பகிர்ந்து வந்தார்கள்.ஆனால் தற்போது வர்த்தக பணியாளர்கள், மீடியாக்கள் என பலர் அத்தனை மொழிகளிலும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டை போலியாக பகிர்ந்து வருகிறார்கள் என்று சித்தார்த் கூறியுள்ளார். நடிகர் சித்தார்த்தின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
How a lot is the going fee or fee in this day and age for fudging assortment stories of flicks?
Manufacturers had been mendacity about BO figures for ages… Now the “industry” and “media” have began their “reputable” figures… All languages, all industries…identical.
Pan India dishonesty????
— Siddharth (@Actor_Siddharth) December 22, 2021