கடந்த 90களில் பல சூப்பர் ஹிட் ரொமான்ஸ் படங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் மோகன், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ’ஹரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை விஜயஸ்ரீ இயக்கி வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
தந்தை மகள் சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தந்தை கேரக்டரில் மோகன் நடிப்பதாகவும் மகள் கேரக்டரில் பிரபல நடிகை ஒருவர் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் குஷ்பு, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகனின் டைட்டில் போஸ்டர் எப்படி இருக்கும் என்பதை ஏப்ரல் 14 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
நான் வீழ்வேன் என்று
நினைத்தாயோபுத்தாண்டு தினத்தில்@vijaysrig Directorial#SilverJubileeStarT
ஹரா”மோகனின்
TITLE TEASER#14ஏப்ரல் #MOHAN @khushsundar#HARAA #JMcinemas#kovaimohanraj @onlynikil @onlygmedia #NM pic.twitter.com/7VVGoIn31X— Nikil Murukan (@onlynikil) March 30, 2022