ஹைலைட்ஸ்:

  • வெந்து தணிந்தது காடு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
  • போஸ்டரில் வித்தியாசமாக இருக்கும் சிம்பு

காதலை அழகாக சொல்வதற்கு பெயர் போன கவுதம் மேனன், சிம்பு கூட்டணி எப்பொழுதுமே ஸ்பெஷல் தான். விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை அடுத்து சிம்புவும், கவுதம் மேனும் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

அந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று தலைப்பு வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த தலைப்பை மாற்றிவிட்டனர்.

எஸ்டிஆர்47 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 6ம் தேதி 12.15 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவித்தபடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்திற்கு வெந்து தணிந்தது காடு என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். போஸ்டரில் சிம்புவை பார்த்தால் வித்தியாசமாக இருக்கிறார். அவரின் கெரியரிலேயே இப்படி லுக்கில் நடித்தது இல்லை என்று விமர்சனம் எழுந்திருக்கிறது.

போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
இருக்கு, தரமான சம்பவம் இருக்கு. சிம்பு வேற லெவலில் இருக்கிறார். நன்றி கவுதம் மேனன். படத்தை பார்க்க காத்திருக்கிறோம். படத்தை இயக்குவது கவுதம் மேனனா, வெற்றிமாறனா, போஸ்டர் தரமாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

தோழியை இழந்த யாஷிகாவுக்கு மேலும் ஒரு பெரும் இழப்பு