சிவகார்த்திகேயன் நடித்த அடுத்த திரைப்படத்திற்கு திடீரென நீதிமன்றம் தடைவிதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘அயலான்’ என்பதும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘அயலான்’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிடக் கூடாது என தடை கோரி டேக் எண்டர்டெயின் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ’அயலான்’ படத்தை ஜனவரி 3ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.