ஹைலைட்ஸ்:

  • சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்
  • நாளுக்கு நாள் ஸ்டைலாகிக் கொண்டே போகும் சிம்பு

சிம்பு குண்டாகிட்டார், அங்கிள் மாதிரி இருக்கிறார், கெரியர் காலி என்று விமர்சனம் எழுந்த நிலையில் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார்.

அவர் ஒல்லியானதை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விட, சிம்புவை கிண்டல் செய்தவர்களோ வாயடைத்து போனார்கள்.

இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக தன் உடல் எடையை மேலும் 15 கிலோ குறைத்து சின்னப் பையன் மாதிரி ஆகிவிட்டார் சிம்பு.

எல்லாம் கிராபிக்ஸ் மக்களே என்று சிலர் நம்பாமல் விமர்சிக்க, சட்டை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டார் சிம்பு. இந்நிலையில் நேற்று மாலை மனிதன் சும்மா இல்லாமல் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகைகள் அசந்தே போனார்கள். சிம்புவை பார்த்து தூக்கம் போய்விட்டதாக ரசிகைகள் பலர் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்துள்ளனர்.

தலைவன் நாளுக்கு நாள் வேற மாறி ஆகிட்டே இருக்கான் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் குஷியில் இருக்கிறார்கள். சிம்பு வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.

சிம்புவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட இந்த புகைப்படத்தை பார்த்து வியக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்: பொண்ணு நம்ம குக் வித் கோமாளி…