தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகிய ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்தி வெளியானது.
இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
’நம்ம ஆட்டம் இனிமேல் வேற மாதிரி இருக்கும்’ என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த பதிவும், அதில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
The much-awaited #BeastTrailer is liberating on April second @ 6 PM
Namma aattam inimey vera maari irukum ??@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastTrailerOnApril2 #BeastModeON #Beast pic.twitter.com/EtpNDVKv4L— Solar Photos (@sunpictures) March 30, 2022