இந்த நிலையில் இந்த வருடம் நடந்து முடிந்த ஐ. பி.எல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது. பிரையன் லாராவை பேட்டிங் பயிற்சியாளராகவும், டேல் ஸ்டெயினை வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் அணியின் இணைய உள்ளனர்.
முத்தையா முரளிதரன் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் உத்தி வகுப்பாளராக தொடர்கிறார். அதே நேரத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி பீல்டிங் பயிற்சியாளராக இருப்பார். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது பணியை தொடர்வார். இவ்வாறு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சன், அப்துல் சமது, அதிவேக காஷ்மீர் பவுலர் உம்ரன் மாலிக் ஆகியோரை தக்க வைத்துள்ளது. ஐபிஎல் ஏலம் பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெறுகிறது.
டாம் மூடி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர, சைமன் கேடிச் அசிஸ்டண்ட் கோச் பதவியில் செயலாற்றுவார். ஐபிஎல் 2021 தொடர் சன் ரைசர்ஸ் அணிக்கு மறக்க வேண்டிய தொடராக அமைந்தது. டேவிட் வார்னரை அனாவசியமாக கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கி விட்டு, அவரை அணியிலிருந்தும் நீக்கி அவமானப்படுத்தியது சன் ரைசர்ஸ் நிர்வாகம்.
இதையும் படிங்க: பிரச்சனை பிசிசிஐ-யிடம்தான் – கோலி கேப்டன்சி விவகாரத்தில் ஷாகித் அஃப்ரீடி விமர்சனம்
வார்னர் கேப்டன்சியில்தான் 2016-ல் ஐபிஎல் கோப்பையை வென்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். ஆனால் அவரையே அவமானப்படுத்தி வெளியேற்றியது. ஆனால் வார்னர் மீண்டும் உலகக்கோப்பை டி20-யில் பார்முக்குத் திரும்பினார்.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.