நேற்று 210 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் குவிக்க எப்படியிருந்தாலும் சன் ரைசர்ஸ் அதை அடிக்கப்போவதில்லை இப்படியிருக்கையில் கேன் வில்லியம்சன் போன்ற நல்ல பேட்டர்கள் ஆடுவதைப் பார்க்கத்தான் கொஞ்ச நஞ்ச ரசிகர்களும் வருகின்றனர், ஆனால் அவர்கள் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுவது போல் நடுவர்களே நடந்து கொள்வது ரசிகர்களிடையே எரிச்சலை கிளப்பியுள்ளது, ஒரு நல்ல பந்தை வீசி பிரசித் கிருஷ்ணா வில்லியம்சனை அசத்தினர், அதை படிக்கல் ஒழுங்காகப் பிடித்து அவுட் ஆகிறார் என்பதைத்தான் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
நேற்று மட்டுமல்ல இதற்கு முன்பு ஒருமுறை சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்று சன் ரைசர்ஸ் அணிக்கு முக்கியமான ஒரு நோ-பாலை மறுத்தனர், வைடு பந்தை வைடு கொடுக்காமல் விட்டதும் நடந்தது, இல்லை என்று யாரும் கூற முடியாது, அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விட்டுக்கொடுப்பு போட்டிகளும் நடைபெற்றுள்ளதை அப்போதைய ரசிகர்களின் மீம்களில் வெளியிட்ட கிண்டல்களே வெளிப்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக நடத்திவிட்டு பணம் சம்பாதிக்கட்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
நேற்று 3ம் நடுவர் கே.என்.அனந்தபத்மநாபன் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பைத்தான் வழங்கினார், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக அந்தத் தீர்ப்பு அமைந்தது. நேற்று புனேயில் சன் ரைசர்ஸ் விரட்டிய போது 2வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச அருமையான பந்து வில்லியம்சன் மட்டை விளிம்பில் பட்டது. விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கையை நீட்டினார் ஆனால் பந்து கையுறையில் பட்டு ஸ்லிப்பில் தேவ் தத் படிக்கல் பிடிக்கும் முன்னர் தரையில் பட்டது நன்றாகத் தெரிந்தது, படிக்கல்லுக்குமே அது நன்றாகத் தெரியும் கேட்ச் இல்லை என்பது, ஆனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகைக்கு அவர் தன் உரிமையாளருக்குத்தானே விசுவாசமாக இருக்க முடியும்? அவரும் பிடித்ததாக ஆட்டம் போட்டார். தேர்ட் அம்ப்யர் அனந்த பத்மநாபனிடம் ரிவியூ சென்றதில் அவர் அதிர்ச்சிகரமாக அவுட் என்றார், பந்து தரையில் பட்டது எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் பாவம் அனந்தபத்மநாபனுக்குத் தெரியவில்லை.
இந்நிலையில் தோல்வி, சொந்த பேட்டிங்கில் அநீதித் தீர்ப்பு இதோடு ரூ.12 லட்சம் அபராதம் வேறு, இதெல்லாம் ஐபிஎல் கொடுமைகள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.