சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கும் ஜெயம் பீம் படம் வரும் நவம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜெய் பீம்

ஞானவேல் எழுதி, இயக்கியிருக்கும் ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் சூர்யா. அவரின் பிறந்தநாள் அன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது படக்குழு. இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சூர்யா.

Twitter-Suriya Sivakumar

சூர்யா

ஜெய் பீம் படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வரும் நவம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. படத்தில் நடித்திருப்பதுடன் தன் மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்திருக்கிறார் சூர்யா. மேலும் அமேசான் பிரைமில் சூர்யாவின் படம் நேரடியாக வெளியாவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த தீபாவளிக்கு அண்ணாத்தயுடன், ஜெய் பீமும் வருகிறார்.

அமேசான் பிரைம்

ஜெய் பீம் படம் மட்டும் அல்ல சூர்யா, ஜோதிகா சேர்ந்து தயாரித்திருக்கும் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், உடன்பிறப்பே, ஓ மை டாக் ஆகிய படங்களும் அமேசான் பிரைமில் வெளியாகிறது. கொரோனா வைரஸ் காலத்தில் ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்வது தான் பாதுகாப்பானது என்று நினைத்து தான் தயாரித்த நான்கு படங்களையும் அமேசான் பிரைமில் வெளியிடுகிறார் சூர்யா.

Twitter-Suriya Sivakumar