நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கும் ’சூர்யா 41’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக சூர்யா அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் .
மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுடன் நடிகை கீர்த்திஷெட்டி முதன்முதலாக இணைகிறார். ஏற்கனவே இவர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’தி வாரியர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
We’re glad to welcome the pretty and gifted @IamKrithiShetty onboard #Suriya41!@Suriya_offl #DirBala #Jyotika @gvprakash @rajsekarpandian #Balasubramaniem pic.twitter.com/AIvrBXTvlJ
— 2D Leisure (@2D_ENTPVTLTD) March 28, 2022