சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்து சூர்யா பதிவு செய்த டுவிட் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
இந்த நிலையில் சூர்யா – பாலா இணையும் இந்த மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் அடுத்த திரைப்படமான பாலா இயக்கும் ’சூர்யா 41’ திரைப்படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்திற்கும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Satisfied to be a part of the grasp movie maker #directorBala sir and @Suriya_offl sirs intense movie #Suriya41 with @2D_ENTPVTLTD @rajsekarpandian pic.twitter.com/aO0J7aLacl
— G.V.Prakash Kumar (@gvprakash) March 28, 2022