தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த மாஸ் தகவலை சூர்யா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
சூர்யா நடித்து தயாரிக்கும் ’சூர்யா 41’ என்ற திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க இருக்கிறார் என்பதும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இன்று முதல் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் 18 ஆண்டுகளுக்கு பின்னர் பாலா ‘ஆக்சன்’ என்று கூறுவதை அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன் என்றும் உங்களுடைய அனைவரும் வாழ்த்துக்கள் தேவை என்றும் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .
இதனையடுத்து இன்று முதல் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Been looking ahead to #DirBala na my mentor to mention Motion!!! …After 18 years, it’s happiness lately…! This second… we’d like your entire needs! #Suriya41 pic.twitter.com/TKwznuTu9c
— Suriya Sivakumar (@Suriya_offl) March 28, 2022