beast310322 1 206

beast310322 1

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விறுவிறுப்பாக செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

ஏப்ரல் 2ஆம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது என்பதும் ஏப்ரல் 10-ஆம் தேதி சன் டிவியில் விஜய் மற்றும் ‘பீஸ்ட்’ படக்குழுவினர் அளித்த பேட்டி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஏப்ரல் 12ம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் பிரிமியர் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பீஸ்ட்’ படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி ‘பீஸ்ட்’ திரைப்படம் அமெரிக்காவில் ரிலீசாகவிருப்பதாகவும், இந்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் ரிலீஸ் ஆகும் முன்பே ‘பீஸ்ட்’ திரைப்படம் அமெரிக்காவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

beast310322 3

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.