தளபதி 66 படத்தில் விஜய்க்கு Erotomania என்கிற அரிய மனநல பிரச்சனை இருக்கும் கதாபாத்திரமாம்.

தளபதி 66

-66

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தற்போதைக்கு தளபதி 66 என்று அழைக்கிறார்கள். இந்நிலையில் அந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்க்கு Erotomania என்கிற அரிய மனநல பிரச்சனை இருக்கும் கதாபாத்திரமாம்.

மனநல பிரச்சனை

Erotomania பிரச்சனை இருப்பவர்கள் மற்றவருக்கு தன்னை பிடிக்கும் என்று நினைப்பது ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. விஜய் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் இதுவரை நடித்தது இல்லை. அதனால் தளபதி 66 படம் மீது தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

விஜய்

தளபதி 66 படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 66 படத்தில் இரண்டு பாடல்களுக்கு தனக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்குமாறு பிரபுதேவாவிடம் கேட்டிருக்கிறாராம் விஜய். அவர் கேட்டு பிரபுதேவா முடியாது என்றா சொல்லப் போகிறார். தளபதி 66 படத்தில் ரசிகர்களுக்கு செம டான்ஸ் ட்ரீட் இருக்கு.

பீஸ்ட்

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். டிசம்பர் மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. அதன் பிறகு ஓய்வு எடுத்துவிட்டு தளபதி 66 படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படத்தை 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.