ஹைலைட்ஸ்:

  • அப்பா, மகள் பாசத்தை கொண்டாடும் தளபதி 66
  • விஜய் மகளாக நடிக்கும் சித்தாரா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் நிறைவடையுமாம். படத்தை 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தளபதி 66 படத்தை நான் தான் இயக்குகிறேன், தில் ராஜு தயாரிக்கிறார் என்று தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி செப்டம்பர் 26ம் தேதி சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

படத்தின் பூஜை வரும் 14ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் என்றும், அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும் மகேஷ் பாபுவுக்கு எழுதிய கதையை தான் விஜய்யை வைத்து படமாக்கவிருக்கிறார் வம்சி என தகவல் வெளியாகியிருக்கிறது.

தளபதி 66 படத்தில் தந்தை, மகள் இடையேயான பாசத்தை மையமாக காட்டப் போகிறார்களாம். விஜய்யின் மகளாக நடிக்க மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவை தேர்வு செய்திருக்கிறார்களாம். விஜய், வம்சி பைடிபல்லி, தில் ராஜு ஆகியோருடன் மகேஷ் பாபுவுக்கு நல்ல நட்பு உள்ளது. அதனால் தன் மகளை விஜய் மகளாக நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் சித்தாராவும், வம்சியின் மகள் ஆத்யாவும் நெருங்கிய தோழிகள் ஆவர். இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

9 வயதாகும் சித்தாரா இன்ஸ்டாகிராமில் ரொம்ப ஆக்டிவ். தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Samantha:2 நடிகைகள், பொறாமை, டிசைனர், குழந்தை: சமந்தா, நாக சைதன்யா பிரிய காரணம்?

பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே-வின் வைரல் வீடியோ!