இதனால் ஓவர் ரேட்டும் விரைவு கதியில் வீசப்படவில்லை ஸ்லோ ஓவர் ரேட்டில் கேப்டன் ரூட் உட்பட அனைவரும் 100% மேட்ச் தொகையையும் இழந்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 5-ஐயும் இழந்தனர். இது கேப்டனுக்கு மிகப்பெரிய இழுக்கு. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் செம உதை வாங்கிய இங்கிலாந்து, அடிலெய்டில் ஆண்டர்சன், பிராட் இருவரையும் கொண்டு வந்தது, ஆனால் பேட்டிங் பிட்சில் டாசை இழந்தது. ஆண்டர்சன், பிராடை எடுத்த ஜோ ரூட், மார்க் உட்டை உட்கார வைத்து விட்டார். இங்கிலாந்தின் மேகமூட்ட வானிலையில் எந்த வித அதிமுயற்சியும் தேவைப்படாமல் அலுங்காமல் குலுங்காமல் எடுக்கும் 5 சீம் பவுலர்களை தேர்வு செய்து சிக்கினர். இந்தப் பிட்ச் வறண்ட பிட்ச், இதில் ஜாக் லீச் ஓரளவுக்குக் கைகொடுத்திருப்பார்.
கடைசியில் ஏகப்பட்ட கேட்ச்களை விட்டது, செலக்ஷன் தவறுகள், பிராட், ஆண்டர்சன், ஆகியோர் அங்கு எப்படி வீச வேண்டும் என்று கற்றுக் கொண்ட போது டெஸ்ட்டில் இங்கிலாந்து தோற்றுப் போயிருந்தது. வெறும் ஜோ ரூட், மலான் தவிர யாரும் ஆடுவதில்லை. முதலில் செத்த தொடக்க கூட்டணியான ஹசீப் ஹமீது, ரோரி பார்ன்ஸை மாற்ற வேண்டும். ஜாக் கிராலி, ஜானி பேர்ஸ்டோவைக் கொண்டு வர வேண்டும். இங்கிலாந்து தோல்வியில் என்ன பிரச்சனை எனில், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கமின்ஸ் இல்லாத நிலையில் தோல்வி ஏற்பட்டுள்ளது.
அடுத்த டெஸ்டுக்கு இருவருமே வந்து விடுவார்கள் என்ன செய்யப் போகிறார் ஜோ ரூட்? அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ஷார்ட் பிட்ச் ஆக வீசி வீசி ஆஸ்திரேலியாவை ஆட விடாமல் செய்ததால் நன்றாக செட்டில் ஆகினர். ஃபுல் லெந்த்தில் வீசி ஆஸ்திரேலியா பேட்டர்களை ஆட வைத்து மிஸ்டேக் செய்ய வைத்து விக்கெட் வீழ்த்தும் கலையை இங்கிலாந்து கைப்பற்றாமல் ஏனோதானோவென்று வீச கேப்டன் ஜோ ரூட் அனுமதித்தார், காரணம் அவருக்குமே பிட்ச் பற்றிய கணிப்பு போதாமையாகவே இருந்தது.
இந்நிலையில் ரூட் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்: “இதே தவறுகளைத்தான் செய்து வருகிறோம், இன்னும் கொஞ்சம் ஃபுல் லெந்த்தில் வீசியிருக்கலாம். பேட்டிங்கில் நிச்சயம் இன்னும் பெட்டராக இருக்க வேண்டும், பெரிய ஸ்கோர்களை அடிக்க வேண்டும். ஒரு அணியின் அணுகுமுறையும் ஆசையும் 2வது இன்னிங்சை ஆடுவதைப் பொறுத்துதான் இருக்கிறது, ஆனால் நாங்கள் இங்கு சோடை போய்விட்டோம். பந்தை ஃபுல் லெந்தில் வீசி அவர்களை டிரைவ் ஆட வைக்கும் தைரியம் எங்களிடம் இல்லை. பாடங்கள் கற்றுக் கொண்டோம், அடுத்த போட்டியில் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.” என்றார் ஜோ ரூட்.
Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube