ஜோ வால்கர் 3/13 விக்கெட்களையும், டிரென்ட் போல்ட், இஷ் சோதி, அனுராக் வர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தார்கள்.
நார்த்ர்ன் கினைட்ஸ் இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய நார்த்ர்ன் கினைட்ஸ் அணியில் ஓபனர் கிளர்க் 12 பந்துகளில் 32 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்தனர். இதனால், அந்த அணி 101/9 எனத் திணறியது. இறுதியில் கடைசி ஓவருக்கு 8 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், கையிருப்பில் 4 விக்கெட்கள் இருந்தன. ஆனால், அந்த அணி முதல் 5 பந்துகளில் 3 விக்கெட்களை இழந்து, 2 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி பந்திற்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.
இதனால், ஆட்டத்தில் பரபரப்பு அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், 10ஆவது இடத்தில் களமிறங்கிய டிரென்ட் போல்ட் மிட் விக்கெட் திசையில் மெகா சிக்ஸர் அடித்து, அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், போல்ட் ஆல்-ரவுண்டர் அவதாரம் எடுத்துள்ளார். இதனால், அவருக்கு மேலும் சில கோடிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.