ஹைலைட்ஸ்:

  • முதல்வரை சந்தித்த வடிவேலு
  • தான் யார் என்று காட்ட ஸ்டாலினை சந்தித்த வடிவேலு

கொரோனா நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என்று பலரும் முதல்வரை சந்தித்து நிதி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வடிவேலு கடந்த வாரம் தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து கொரோனா நிதிக்கு ரூ. 5 லட்சம் கொடுத்தார். மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேக்கு மாதிரி உடம்பாக இருந்தாலும் தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை காமெடியாக கூறினார் வடிவேலு. வடிவேலு முதல்வரை சந்திக்க வந்ததற்கு கொரோனா நிதி காரணம் இல்லையாம்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் துவங்கிய வேகத்தில் நின்றுவிட்டது. அது தொடர்பாக வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 24ம் புலிகேசி பிரச்சனையை தீர்த்து வைக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களத்தில் இறங்கினார். இதனால் வடிவேலு மீண்டும் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஐசரி கணேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாம். ஐசரி கணேஷ் ஷங்கருக்கு ஆதரவாக இருப்பதாக வடிவேலுவுக்கு தோன்ற அவர் கோபம் அடைந்தாராம். வடிவேலு பின்வாங்கியதை பார்த்த ஷங்கரும் கடுப்பாகிவிட்டாராம்.

இதற்கிடையே ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். முதல்வருக்கும், ஷங்கருக்கும் இடையே நல்ல நெருக்கம் உண்டு. அதனால் தான் அவர் கொரோனா காலத்திலும் திருமணத்தில் கலந்து கொண்டார் என்று பேச்சு கிளம்பியது.

இந்த பேச்சு காத்து வாக்கில் வடிவேலுவை எட்ட அவரோ, நான்லாம் அந்த காலத்தில் இருந்தே முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கம். என் நெருக்கம் எந்த அளவுக்கு என்பதை புரிய வைக்கிறேன் என்று கூறிவிட்டு தான் ஸ்டாலினை சந்தித்தாராம்.

பண்ணை வீட்டில் இரவில் ‘ஸ்பெஷல்’ பார்ட்டி: சூப்பர் ஹிட் பட நடிகை கைது