இந்த ஆண்டு சமூக வலைதளத்தில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு வார்த்தை என்றால் அது வலிமை அப்டேட் தான். ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் அப்டேட்க்காக தவமாய் தவமிருக்கின்றனர். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித்தை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் எச்.வினோத்.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படம் தொடர்பான அப்டேட் கேட்டு அனைவரையும் நச்சரித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

முதலமைச்சர் தொடங்கி, கிரிகெட் வீரர்கள் வரை அனைவரிடமும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பரபரப்பை கிளப்பியதை தொடர்ந்து, அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இதனையடுத்து கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியதை அடுத்து வலிமை திரைப்படத்தின் அப்டேட் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தனர் படக்குழுவினர். இதனால் அப்செட் ஆனா ரசிகர்கள் மறுபடியும் வலிமை அப்டேட் கேட்டு அனைவரையும் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!
முன்னதாக பர்ஸ்ட்லுக் வெளியிடும் தேதி கூட உறுதியாகாத நிலையில் வலிமை படத்தை பார்க்க ஆன்லைனில் இதுவரை 10 லட்சம் பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர். இதுவரை எந்த படமும் இப்படி ஒரு சாதனையை படைத்ததில்லை என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளதால், தற்போது வலிமை திரைப்படத்தின் வர்த்தகம் சூடுபிடிக்க துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அளவில் வலிமை படத்தின் தியேட்டர், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் 210 முதல் 215 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போனி கபூருடன் திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட பல வணிகத்திலும் மிக நெருங்கிய நட்பு பாராட்டி வரும் zee நிறுவனம் வலிமை திரைப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் OTT உரிமையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் அமேசான் நிறுவனமும் படத்தின் OTT உரிமைய பெற போட்டி போட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.