nayanthara030422 2 457

nayanthara030422 2

உலகில் உள்ள எல்லா பெண்களும் தங்களுக்கு வரப்போகிற கணவர் அல்லது கணவர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களோ, அதனை விக்னேஷ் சிவன் செய்துள்ளதை அடுத்து நயன்தாராவின் முகத்தில் தெரியும் உச்சகட்ட மகிழ்ச்சி குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தந்தை பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அவருடைய பிறந்த நாளுக்கு நேரில் சென்று விக்னேஷ் சிவன் வாழ்த்து கூறிய புகைப்படம் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக, ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சன் குரியன்! எங்களுடைய மகிழ்ச்சி என்பது நீங்கள் சிரிப்பதைக் கண்டு, நீங்கள் சாப்பிடுவதை கண்டு, நீங்கள் சந்தோசமாக இருப்பதை நாங்கள் பார்ப்பதில் தான் இருக்கிறது. உங்களை பார்த்து எங்களுடைய வாழ்க்கை அழகாகிறது. நீங்கள் எப்போதும் அனைத்து சுகங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கடவுளை நான் வேண்டுகிறேன். உங்களது ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் தேவை’ என்று பதிவு செய்துள்ளார்.

nayanthara030422 1

உலகில் உள்ள அனைத்து பெண்களுமே தங்கள் பெற்றோர்களை தங்களுக்கு வரப்போகும் கணவன் நல்லபடியாக மதிப்பு மரியாதை கொடுத்து, அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு முன்பே பூர்த்தி செய்வதை அடுத்து நயன்தாரா முகத்தில் தெரியும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தெரியும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இப்படி இருந்தால் அவரை எந்த பெண்ணுக்கு அவரை பிடிக்காது, அதனால் தான் நயன்தாராவுக்கு அவரை ரொம்ப பிடித்து விட்டது என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.