சார்பட்டா பரம்பரை படம் புகழ் டான்சிங் ரோஸ் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார். படத்தில் செல்வராகவன் மட்டும் அல்லாமல் மேலும் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ஷைன் டாம் சாக்கோ. அவர் அண்மையில் தான் பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

டான்சிங் ரோஸ்

மூன்றாவது வில்லன் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷபீர் தான் அந்த மூன்றாவது வில்லன் என்று கூறப்படுகிறது. 15 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றிருக்கும் ஷபீர், பீஸ்ட் படத்தில் நடிக்கிறார் என்பதை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷபீரும் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி

பீஸ்ட் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்காத வரை நிம்மதியே என்கிறார்கள் ரசிகர்கள். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் செம கெத்தாக இருந்தது. படத்தை பார்த்தவர்கள் வில்லனை திட்டுவதற்கு பதில் கொண்டாடினார்கள். மாஸ்டர் படத்தின் ஹீரோ விஜய் தான் ஆனால் படம் விஜய் சேதுபதியுடையது என்று விமர்சனம் எழுந்தது.

பூஜா ஹெக்டே

பீஸ்ட் படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மாஸ்டரை அடுத்து பீஸ்ட் படத்திற்கும் அனிருத் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.