ஹைலைட்ஸ்:

  • கொரோனா தடுப்பூசி போட்டாரா விஜய்?
  • பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்
  • நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் பீஸ்ட்

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவை ஒரு புரட்டு புரட்டிவிட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மூன்றாவது அலை வரப் போவதை நினைத்து மக்கள் கவலையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் மக்களை வலியுறுத்தி வருகின்றன. திரையுலக பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதுடன், அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களின் ரசிகர்களையும் ஊசி போடுமாறு ஊக்குவித்துள்ளனர்.

கமல் ஹாசன், ரஜினி, சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சு கிளம்பியது. ஆனால் எந்த புகைப்படமும் வெளியாகவில்லை.

Beast சென்னையில் துவங்கிய பீஸ்ட் ஷூட்டிங்: ஆரம்பமே விஜய், பூஜா டான்ஸ் தான்விஜய் தற்போது பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நேற்று துவங்கியது. சென்னையில் இருக்கும் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விஜய், பூஜாவின் பாடல் காட்சியை தான் படமாக்கி வருகிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாம். ஹீரோயின் பூஜா ஹெக்டே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டார்.

விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா, இல்லை சும்மா தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டது உண்மை எனில் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

அவர் ஊசி போட்டுக் கொண்டதை உறுதி செய்வதற்காக இல்லை. மாறாக அந்த புகைப்படத்தை பார்த்தால் அவரின் ரசிகர்கள், ரசிகைகள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். அதனால் விஜய், தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

என்ன தான் நடந்துச்சு அண்ணா, உண்மையை சொல்லுங்கள் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
Vijay நடிகை சங்கவியை தினமும் இரவில் தொல்லை செய்தார் விஜய்: பயில்வான் ரங்கநாதன்