ஹைலைட்ஸ்:

  • பீஸ்ட் படம் குறித்து கசிந்த தகவல்
  • சென்னையில் நடந்து வரும் பீஸ்ட் படப்பிடிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் போட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் அந்த ஷாப்பிங் மால் செட்டில் என்ன காட்சியை படமாக்கி வருகிறார்கள் என்பது குறித்து ஒரு தகவல் கசிந்து தீயாக பரவியிருக்கிறது. ஷாப்பிங் மாலுக்குள் புகும் தீவிரவாதிகள் அங்கிருக்கும் மக்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கிறார்களாம்.

இது குறித்து அறிந்த விஜய் மாலுக்கு வந்து தீவிரவாதிகளுடன் மோதி மக்களை மீட்கிறாராம். விஜய் படம் தொடர்பான தகவல் கசிவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்த மாஸ்டர் படத்தின் காட்சிகளே கசிந்துவிட்டன. இப்படி விஜய் படம் தொடர்பாக ஏதாவது கசிவதை பார்க்கும் ரசிகர்களோ, அது ஏன் எங்க அண்ணனுக்கே இப்படி நடக்கிறது, படக்குழுவில் இருக்கும் அந்த கருப்பு ஆடு யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஷாப்பிங் மால் காட்சி குறித்த தகவல் பொய்யாகக் கூட இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று பீஸ்ட் படத்தின் பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்: பொண்ணு நம்ம குக் வித் கோமாளி…