ஹைலைட்ஸ்:

  • சர்தார் கெட்டப்பில் விஜய்யை சந்தித்த கார்த்தி
  • கார்த்தியை அடையாளம் தெரியாமல் விழித்த விஜய்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் சர்தார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கார்த்தியை சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் பார்த்த அனைவரும் வியந்து தான் போனார்கள். சர்தார் படத்தின் ஷூட்டிங் சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோஸில் நடந்து வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் கோகுலம் ஸ்டுடியோஸுக்கு அருகில் தான் நடக்கிறது. அதனால் விஜய்யும், கார்த்தியும் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த சந்திப்பு இன்று தான் நடந்திருக்கிறது. வயதான கெட்டப்புடனேயே சென்று விஜய்யை சந்தித்திருக்கிறார் கார்த்தி. அவர் திடீர் என்று வந்து நின்றதும் விஜய்க்கு கார்த்தியை அடையாளம் தெரியவில்லையாம்.

வந்திருப்பது யார் என்று தெரியாமல் விஜய் அப்படியே பார்க்க, நான் தான் அண்ணா என்று தன்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கார்த்தி. அவர் சொன்ன பிறகு தான் விஜய்க்கு அடையாளம் தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

கார்த்தியா இது என்று கூறி அவரை கட்டிப்பிடித்து வாழ்த்தியிருக்கிறார் விஜய். கார்த்தி, விஜய் சந்திப்பு குறித்து அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் விஜய் பற்றி தான் பேச்சாக உள்ளது. அவர் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக நடந்து கொள்ளுமாறு நீதிபதி தெரிவித்தார்.

வரி விலக்கு கேட்க சட்டப்படி உரிமை இருக்கும்போது விஜய்க்கு ஏன் இந்த அபராதம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அஜித் உடம்பில் இருந்து அந்த எலும்பை எடுத்துட்டாங்க: ஸ்டண்ட் மாஸ்டர் திடுக் தகவல்