ஹைலைட்ஸ்:

  • ட்விட்டரில் மோதிக் கொள்ளும் தல, தளபதி ரசிகர்கள்
  • சண்டை போட ஹேஷ்டேகுகளை உருவாக்கிய ரசிகர்கள்

அஜித், விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இது அனைவருக்கும் தெரிந்தது தான்.
அப்படி அவர்கள் மோதும்போது அஜித்தை திட்டி விஜய் ரசிகர்களும், விஜய்யை கலாய்த்து அஜித் ரசிகர்களும் ஹேஷ்டேகுகளை உருவாக்கி அதை ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாக விடுவார்கள்.

அவர்கள் சண்டை போட உருவாக்கும் ஹேஷ்டேகுகளின் அர்த்தம் புரியாமல் இந்தி சினிமா ரசிகர்கள் குழம்பியது எல்லாம் நடந்திருக்கிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் அந்த மோதல் ஏற்பட்டிருக்கிறது. விஜய்க்கும், அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. இதனால் தந்தை, மகன் பேசிக்கொள்வது இல்லை.
இதை வைத்து #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் என்கிற ஹேஷ்டேகை உருவாக்கி விஜய்யை விமர்சிக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

vijay

பதிலுக்கு #வாழவிடுங்க_அஜித் என்கிற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து அவரை கிண்டல் செய்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ஹேஷ்டேகுகள் தமிழில் இருப்பதால் அதன் அர்த்தத்தை சொல்லுமாறு பிற மொழி ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

வாழவிடுங்க அஜித் என்கிற ஹேஷ்டேகை உருவாக்க இந்த செய்தி தான் காரணம்.
Samantha:சமந்தாவும், கணவரும் பிரிய டிசைனருடனான உறவு காரணமா?