ஹைலைட்ஸ்:

  • பீஸ்ட் படத்தில் மூன்று வில்லன்கள்
  • மாஸ்டர் வில்லன் போன்று இருக்காது என ரசிகர்கள் நிம்மதி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது.

இதையடுத்து மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்த மூன்று வில்லன்களும் பவர்ஃபுல்லானவர்கள் கிடையாதாம்.

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ அண்மையில் பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மூன்று வில்லன்களில் அவரும் ஒருவர். பீஸ்ட் படம் மூலம் பல ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கிறார் பூஜா ஹெக்டே.

மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி என்று பூஜா தெரிவித்துள்ளார். மேலும் சிலகட்ட படப்பிடிப்புகளை நடத்திவிட்டு படக்குழு ரஷ்யாவுக்கு கிளம்ப திட்டமிட்டிருக்கிறது.

பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி என்கிற ஒரேயொரு வில்லன் தான் இருந்தார். ஆனால் அந்த வில்லனோ, ஹீரோவை விட ஸ்கோர் செய்துவிட்டார்.

மாஸ்டர் போன்று பீஸ்ட் படத்தில் அப்படி எதுவும் நடக்காது என்று விஜய் ரசிகர்கள் நம்புகிறார்கள். லோகேஷ் மாதிரி நெல்சன் தன் வில்லன்களை கெத்தாக காட்டி ஹீரோவை ஓவர்டேக் செய்யவைக்க மாட்டார் என்று நம்பப்படுகிறது.

மக்கள் பணிக்கு பிரேக் விட்டு புதுச்சேரிக்கு கிளம்பிய எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்