சூப்பர் டூப்பர் ஹிட்டான 96 படம் ரிலீஸாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

96

96

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படம் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. முன்னதாக படத்தின் தலைப்பை அறிவித்து போஸ்டர் வெளியிட்டபோது இது என்னய்யா 96னு ஒரு தலைப்பு என்று ஆளாளுக்கு விமர்சித்தார்கள். ஆனால் படத்தை பார்த்ததும் அனைவரும் இம்பிரஸ் ஆகிவிட்டனர்.

ராம், ஜானு

ராம், ஜானு கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. ஹீரோவும், ஹீரோயினும் கட்டிப்பிடிக்கவில்லை, டூயட் பாடவில்லை, குத்தாட்டம் போடவில்லை ஆனாலும் 96 படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதிலும் குறிப்பாக த்ரிஷா அணிந்த உடை மிகவும் பிரபலமானது. பல பெண்கள் ஜானு டிரஸ் வேண்டும் என்று கேட்டு வாங்கி அணிந்தார்கள்.

விஜய் சேதுபதி

96 படம் ரிலீஸாகி இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ட்வீட் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. 96 படத்தில் வந்த விஜய் சேதுபதியை பிடிக்காதவர்களே இல்லை எனலாம். அந்த படத்தில், நீ ஆம்பள நாட்டுக்கட்டைடா என்று விஜய் சேதுபதியிடம் சொல்வார் த்ரிஷா. தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

Twitter-VijaySethupathi

ரீமேக்

96 படத்தை தெலுங்கில் சமந்தாவை வைத்து ரீமேக் செய்தார் பிரேம்குமார். ஆனால் படம் படுதோல்வி அடைந்தது. சமந்தா ஓவர் ஆக்டிங் செய்து கெடுத்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் 96 படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.