விஷால் நடித்து வரும் படப்பிடிப்பின் இடையே திருமண நாளை கொண்டாடிய பிரமுகரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ‘லத்தி’ என்பதும் இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா மற்றும் ரமணா இணைந்து தயாரித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் காவல்துறை அதிகாரி கேரக்டரில் விஷால் நடித்து வருவதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அதேபோல் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஷால் ஜோடியாக சுனைனா இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரியும் பீட்டர் ஹெயின் நேற்று தனது திருமண நாளைக் கொண்டாடினார். தனது திருமண நாளை அவர் கேக் வெட்டி கொண்டாடிய போது விஷால் மற்றும் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்த புகைப்படத்தை விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Glad wedding ceremony anniversary to our cherished stunt grasp @PeterHeinOffl. We celebrated his wedding ceremony anniversary within the set of LATHTHI the day past. GB#Laththi #Laatti pic.twitter.com/NY7Urf698R
— Vishal (@VishalKOfficial) December 23, 2021