ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், கேகேஆருக்கு எதிராக கார்த்திக்கின் வீரதீரம் கண்டு நெகிழ்ந்தார். போட்டிக்கு பிந்தைய நிகழ்ச்சியில் பேசிய டுபிளெசிஸ் விக்கெட் கீப்பர்-பேட்டர் தோனிக்கு நெருக்கமான குணாதிசயத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கின் அமைதியான இருப்பை பாராட்டினார்.
“ஒரு இலட்சிய உலகில், நாங்கள் மிகவும் உறுதியான முறையில் வெற்றி பெற விரும்புவோம், ஆனால் வெற்றி வெற்றிதான். தினேஷ் கார்த்திக் அனுபவம் இறுதியில் உதவியது, அவரது கூலான இன்னிங்ஸினால் வெற்றி, வெகு தொலைவில் இல்லை. ஐஸ் கூலாக இருப்பதில் தினேஷ் கார்த்திக், எம்.எஸ் தோனிக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்.
வெற்றி மகிழ்ச்சிதான், சிறிய இலக்கை நெருக்கமாகச் சென்று விரட்டுவது தொடரின் ஆரம்பத்தில் நல்லதுதான். சிறிய ஸ்கோர் என்று நாங்கள் கொஞ்சம் பாசிட்டிவ் ஆக ஆட முடியும். ஆனால் கொல்கத்தா பவுலிங் அற்புதம்.
“பந்து முன்னதாக சற்று ஸ்விங் ஆனது ஆனால் இன்று சீம் மற்றும் பவுன்ஸ் இருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, அது 200 ஆக இருந்தது, இன்று அது 130 ஆக இருந்தது. நாங்கள் இன்னும் உறுதியாக இருக்க விரும்புகிறோம். எல்லாம் ஓர் அனுபவம்தான். ரன்கள் ஒரு பிரச்சனையும் இல்லை. கையில் விக்கெட்டுகள் மட்டுமே இருக்க வேண்டும்.
நான் உதவிக்காக மற்றவர்களை நம்பியிருக்கிறேன். முகாமில் பெரிய ஆட்கள் இருக்கிறார்கள். குழுவில் நல்ல தொடர்பு உள்ளது. வீரர்கள், உதவி பணியாளர்கள் ஆதரவாக இருக்கின்றனர். . அவர்கள் யோசனைகளுடன் என்னிடம் வருகிறார்கள், ”
இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.