இந்த 2012ம் ஆண்டில்தான் விராட் கோலி வைஸ் கேப்டனாக கேப்டன் தோனியின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டார். இதில் ரோகித் சர்மாவின் பங்கும் உண்டு. 2012 ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன்னை 3 ரன்களாக கோலியும் ரோகித்தும் ஆக்கினர், இது பாகிஸ்தானுக்கு சாதகமானது. இந்த தருணத்தில்தான் தோனி கடுப்பானார்.
இது குறித்து கோலி, அஸ்வினிடம் யூடியூப் சேனலில் கூறும்போது, “அது மிகவும் வேடிக்கையான தருணம். எம்.எஸ் (தோனி) மகிழ்ச்சியாக இல்லை. பாகிஸ்தான் 329 ரன்களை குவித்ததாக நினைவு. பெரிய கூட்டணிகளை அமைத்தனர். அப்போது நானும் ரோகித் சர்மாவும் பீல்டிங்கில் சொதப்பினோம். அது ஒரு ரன் தான் ஆனால் நானும் ரோகித்தும் இடித்துக் கொண்டு 3 ரன்களை கொடுத்து விட்டோம்.
எனக்கு நினைவு இருக்கிறது, இர்பான் பதான் தான் பந்தை எடுத்து த்ரோ செய்தார், தோனி நினைத்திருப்பார் எப்படி நானும் ரோகித்தும் 3 ரன்களை கொடுத்தோம் என்று. நீங்கள்தான் பவுலர் (அஸ்வின்), உமர் அக்மல்தான் அப்படி ஆடினார். நான் டீப் மிட்விக்கெட், ரோகித்சர்மா டீப் ஸ்கொயர் லெக், இருவருமே ஒரு பந்துக்கு ஓடி வந்து முட்டிக் கொண்டோம்.” என்றார்.
பிறகு இந்த இரண்டு பேட்டர்கள்தான் அதாவது கோலியும் ரோகித்தும்தான் இந்திய அணியை அதே போட்டியில் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். விராட் கோலி அன்றுதான் தன் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரான 148 பந்தில் 183 ரன்கள் என்ற விளாசல் இன்னிங்ஸை ஆடிய நாள், ரோகித் சர்மா அப்போதெல்லாம் பின்னால்தான் இறங்குவார், அவர், 83 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். 3வது விக்கெட்டுக்காக இருவரும் 172 ரன்களைச் சேர்த்தனர்.
இதையும் படிங்க: Year Ender 2021- 2021- ஜோ ரூட்டின் ஆண்டு- டாப் 10 பேட்டர்கள்
ஆனால் அந்த ஆசியக் கோப்பையில் இந்தியா இறுதிக்கு முன்னேறவில்லை. 2016-ல் தோனி தலைமையில்தான் டி20 ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது. 2018-ல் ரோகித் சர்மா இந்தியக் கேப்டனாக ஆசிய கோப்பையை வென்ற போது தோனி ஆடியதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.