vaibav

நேற்று மும்பை பிரபார்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடரின் 11வது போட்டியில் சிஎஸ்கே அணியை தனது அபார ஸ்விங் பந்து வீச்சினால் அலறவிட்ட வைபவ் அரோரா இந்த இடத்துக்கு வருவதற்கு நிறைய கஷ்டப்பட்டுள்ளார் என்று அவரது இளம் பிராய பயிற்சியாளர் தெரிவித்தார்.பஞ்சாப் கிங்ஸ் 160 ரன்கள் இலக்கை நிர்ணயித்த பிறகு சிஎஸ்கேவின் அதிரடி தொடக்க வீரர்கள் ருதுராஜ், ராபின் உத்தப்பா இறங்கினர், அரோராவின் முதல் ஓவரின் கடைசிபந்திலேயே எட்ஜ் எடுத்தது, ஆனால் தவானுக்கு முன்னால் பந்து பிட்ச் ஆனதால் தப்பினார் ருதுராஜ்.

ருதுராஜ் பிறகு ரபாடாவிடம் ஸ்விங்கில் எட்ஜ் ஆகி இதே ஷிகர் தவான் கேட்ச் எடுக்க வெளியேறினார். ஷிகர் தவான் கேட்ச் பிடித்து வழக்கம் போல் தன் தொடையை ஒங்கித் தட்டி கொண்டாடினார். ருதுராஜ் ஒரு இளம் வீரர் காலே நகரவில்லை, ஐபிஎல் கிரிக்கெட் ஒரு வீரருக்கு இதைத்தான் செய்யும்.

3வது ஓவரில் மீண்டும் வீச வந்தார் வைபவ் அரோரா. அது ஒரு அருமையான பந்து ராபின் உத்தப்பா லெக் திசையில் ஆட நினைத்தார், பந்து டாப் எட்ஜ் ஆகி மிட் ஆஃபில் அகர்வாலிடம் கேட்ச் ஆனது. கொடியேற்றினார் உத்தப்பா.

அதே போல் மொயின் அலி என்ற அபாய வீரருக்கும் வைபவ் அரோரா ஒரு டெலிவரியை வீசினார். அதே போல் வெளியே ஸ்விங் ஆன பந்தை காலை நகர்த்தாமலேயே கவர் திசையில் அடிக்கப் போய் மொயின் அலி மட்டையில் வாங்கி ஸ்டம்பை தொந்தரவு செய்தது, வைபவ் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தது. சிஎஸ்கேவை முடக்கியது. 4 ஓவர்கள் வீசிய வைபவ் அரோரா 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

24 வயதான வைபவ் அரோரா இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் இமாச்சல பிரதேசத்திற்காக விளையாடுகிறார். பஞ்சாப் U-19 அணிகளுக்கு பலமுறை தேர்வு செய்யப்பட்டும் வாய்ப்பு கிடைக்காததால், அவர் ஒரு தொழில்முறை நிபுணராக ஹிமாச்சலுக்கு சென்றார்.

இருப்பினும், இரண்டு முறை அவர் கிரிக்கெட்டை விட்டுவிட்டு வேறு வேலை தேடும் எண்ணத்துக்கு ஆட்பட்டார். முதல் முறையாக அவரது குடும்பம் தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்தித்தது மற்றும் வைபவ் மூத்த மகன் என்பதால் பணம் சம்பாதிக்கத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனிப்பட்ட நிதிக் கொந்தளிப்பு மற்றும் U-19 அணியில் இடம் பெறத் தவறியது, வளரும் வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வைபவ் அரோராவின் இளம் பிராயப் பயிற்சியாளர் ரவி வர்மா கூறும் போது, “நான் அதிர்ச்சியடைந்தேன். அவருக்கு என் முதல் எதிர்வினை என்னவென்றால், உங்கள் முழங்காலில் காயம் ஏற்பட்டது, உங்கள் தலையில் அல்ல. அவருடைய குடும்பம் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவிப்பதை நான் அறிவேன். அதனால அவங்க அப்பாவை கூப்பிட்டு வைபவ்க்கு இன்னும் ரெண்டு வருஷம் அவகாசம் கொடுங்க, ஃபைனான்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன்; அவர் ஒரு பைசா கூட செலுத்த வேண்டியதில்லை, ”என்று அவரது குழந்தை பருவ பயிற்சியாளர் ரவி வர்மா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

வர்மா அவரை வேறுவிதமாக சமாதானப்படுத்தி ஹிமாச்சலத்திற்கு செல்ல உதவினார். இருப்பினும், வைபவ் மீண்டும் தனது பயிற்சியாளரை அழைத்தார், அவருக்கு வேறு ஒரு தொழில் விருப்பத்தைத் தேட உதவினார், வர்மா மீண்டும் தனது மனதை மாற்றினார்.

இறுதியில், விஷயங்கள் சிறப்பாக மாறியது மற்றும் வைபவ் தனது பந்து வீச்சிற்காக கவனிக்கப்படத் தொடங்கினார். ரஞ்சி அறிமுகத்தில், அவர் சௌராஷ்டிராவுக்கு எதிராக 9/105 என்ற பவுலிங்குடன் முடித்தார், இதில் இந்திய பேட்டர் சேட்டேஷ்வர் புஜாராவின் விக்கெட்டும் அடங்கும்.

ஐபிஎல் அணிகளுடனான சோதனைகளைத் தொடர்ந்து அவர் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் எடுக்கப்பட்டார். இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை இரவு PBKS க்காக அவர் அறிமுகமானார், பிப்ரவரியில் நடந்த மெகா ஏலத்தில் உரிமையாளரால் 2 கோடி ரூபாய்க்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.