kgf2 2732022mt 8a4

kgf2 2732022m12

யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான ’கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

kgf2 2732022m10

’கே.ஜி.எஃப் 2’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 168 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணிநேரம் 48 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

kgf2 2732022m9

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.