ஹைலைட்ஸ்:

  • ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு வந்த யாஷிகா
  • யாஷிகாவின் நண்பர் வாக்குமூலம்

யாஷிகா தன் தோழி பவானி, செய்யது, அமீருடன் கடந்த சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் சூளேரிக்காடு பகுதியில் வந்தபோது அவரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் பவானி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இடுப்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்கள் செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த யாஷிகாவை நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளனர்.

காரை யாஷிகா அதிவேகமாக ஓட்டியது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவமனைக்கு சென்று யாஷிகாவிடம் வாக்குமூலம் வாங்கிய பிறகு அவரின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்தனர்.

அமெரிக்காவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த பவானி தன் தோழி யாஷிகாவை பார்க்க சென்னைக்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் கார் விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார். யாஷிகா கண் விழித்ததுமே பவானியை பற்றி தான் கேட்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாலும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாலும் பவானி பற்றிய உண்மையை அவரிடம் சொல்லவில்லை. மாறாக பவானி க்ரிட்டிகலாக இருக்கிறார் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள்.

விபத்து நடந்த இரவு நடந்தது என்ன?: யாஷிகாவின் நண்பர் புது தகவல்இதற்கிடையே யாஷிகாவின் நண்பர் நந்தகுமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.